கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. பிரபாஸ் தவிர்த்து கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். புராண பின்னணியில் உருவாகி இருந்த இந்த படத்தில் பிரபாஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் அவரது கதாபாத்திரம் கூட கம்பீரமாக சித்தரிக்கப்படவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.
அந்த சமயத்தில் பாலிவுட் நடிகரும் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்தின் நண்பராக இணைந்து நடித்தவருமான அர்ஷத் வர்ஷி என்பவர் கல்கி படத்தில் பிரபாஸை பார்த்து ஜோக்கர் என விமர்சித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அர்ஷத் வர்ஷிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றி அர்ஷத் வர்ஷி கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது. மக்கள் தான் அதை இடையில் புகுந்து பெரிய அளவில் பிரச்சினை ஆக்கி விடுகின்றனர். நான் பிரபாஸ் என்ற தனிப்பட்ட மனிதனைப் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் படத்தில் நடித்த கதாபாத்திரத்தை தான் ஜோக்கர் போல இருக்கிறது என்று கூறியிருந்தேன். பிரபாஸ் ஒரு திறமையான நடிகர். அவர் அதை பலமுறை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒரு நல்ல நடிகருக்கு ஒரு மோசமான கதாபாத்திரம் கொடுக்கப்படும் போது பார்வையாளரின் இதயம் நொறுங்கி விடுகிறது என்கிற அர்த்தத்தில் தான் நான் அப்படி குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.