2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பல படங்கள் சமீப காலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீப காலமாக தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வசூல் சாதனை செய்து வருகின்றன. அந்த வகையில் விஜய் - திரிஷா இணைந்து நடித்து வெளியான கில்லி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 26 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தும்பாட் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 27 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்திய அளவில் ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் இந்த படம் நம்பர் ஒன் வசூல் செய்த படமாகி உள்ளது.