ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

ஜுனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்த 'தேவரா' படத்தின் முதல் பாகம் இன்று பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கு நடந்தது.
ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் சிலர் ஒரு ஆட்டை இழுத்து வந்து தியேட்டர் வாசலில் நிற்க வைத்து அதன் தலையை ஒரே வெட்டாக வெட்டி, ஜுனியர் என்டிஆர் போஸ்டர் மீது ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். அந்த வீடியோ இன்று அதிகாலை முதலே சமூக வலைத்தளங்களில் பரவியது. அதற்கடுத்த சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது.
மேலும் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் வெடித்த பட்டாசு காரணமாக தீ வித்து ஏற்பட்டு ஜுனியர் என்டிஆர் கட்அவுட் ஒன்று எரிந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து வந்த ரசிகர்கள் தற்போது ரத்த அபிஷேகம் வரை சென்றிருப்பது சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.