விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தமிழ் சினிமாவில் இன்றைய பாடல்கள் அதிரடியாக மட்டுமே அதிகமாக இருக்கிறது என்பது பல இசைப்பிரியர்களின் குற்றச்சாட்டு. இளையராஜா, தேவா காலங்களில் கூட மெலடிப் பாடல்கள் நிறையவே வந்ததுண்டு. அது போல அதிரடியான பாடல்களில் கூட ஒரு ரசனை இருக்கும், இசையும் இருக்கும், வார்த்தைகளும் புரியும். ஆனால், இப்போது வார்த்தைகளும் புரியாத அளவிற்கு மாற்றிவிட்டார்கள் என குறைபட்டுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளிவரும் சில படங்களில் கதையோடு இடம் பெறும் 80, 90களில் வந்த சில படங்களின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தில் 'தளபதி' படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற 'யமுனை ஆற்றிலே' பாடல் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி, சர்ச்சையாகியது ஒரு பக்கம் இருந்தாலும் அது இன்றைய ரசிகர்களை ரசிக்கவும் வைத்தது.
அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த 'விக்ரம்' படத்தில் 'அசுரன்' படத்தில் ஆதித்யன் இசையில் இடம் பெற்ற 'சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. அடுத்து 'லியோ' படத்தில், 'ஏழையின் சிரிப்பில்' படத்தில் தேவா இசையில் இடம் பெற்ற 'கரு கரு கருப்பாயி' பாடல் ரசிகர்களை கூகுள் செய்ய வைத்தது.
மலையாளத்தில் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் 'குணா' படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு' பாடல் இடம் பெற்று பரபரப்பாகி, வழக்கு சர்ச்சை, நஷ்ட ஈடு வரை சென்றது. அந்தப் படத்திற்காகவே அந்தப் பாடல் தமிழகத்திலும் ஓடி 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது 'லப்பர் பந்து' படத்தில் 'பொன்மனச் செல்வன்' படப் பாடலான இளையராஜா இசையில் உருவான, 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் வைரலாகி உள்ளது. படத்தின் காட்சிக்குப் பொருத்தமான விதத்தில் படத்தையே தூக்கிப் பிடிக்கும் ஒரு பாடலாக அப்பாடல் அமைந்தது என ரசிகர்கள் சொல்லும் விதத்தில் ரசிக்கப்படுகிறது.
80, 90களில் இன்றைய தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் இசைக் கருவிகளை வைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பாடல்களை திரையில் மீண்டும் கேட்பது தனி சுகம் என்கிறார்கள் இசை ரசிகர்கள்.