'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் உடுமலை நாராணகவி. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், முன்னணி அரசியல் கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி தனது அண்ணன் வீட்டில் வளர்ந்தார். தீப்பெட்டி சுமந்து விற்று ஒரு நாளைக்கு 25 காசு சம்பாதித்தார். வறுமையின் காரணமாக பள்ளிபடிப்பை 4வது வகுப்போடு முடிடித்துக் கொண்ட அவர் கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு அதனை கற்றார். உடுமலை சரபமுத்து சாமி கவிராயரிடம் நாடக நடிப்பும், பாடல் எழுதவும் கற்றார். பின்னர் சங்கரதாஸ் சாமியிடம் நாடக கலையை கற்று தேர்ந்தார். ஆரம்பத்தில் விடுதலை வேட்கையை தூண்டும் பாடல்களை எழுதியவர், பின்னர் திராவிட கருத்துகள், பகுத்தறிவு கருத்துள்ள பாடல்களை எழுதினார்.
'சந்திரமோகனா' என்ற படத்தில் முதல் பாடலை எழுதி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். திரைப்பாடல்கள், தனி பாடல்கள் எல்லாம் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார் நாராயண கவி. இன்று அவரின் 115வது பிறந்த நாள்