ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சினிமாவில் ‛அழியாத கோலங்கள்' தந்து அகல் விளக்காய் ஒளிர வேண்டியவர் சிறு வயதிலேயே மரணித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி சென்றவர் நடிகை ஷோபா. இன்று அவரது 62வது பிறந்த நாளாகும். கே.பி.மேனன் - பிரேமா தம்பதியின் மகளாக 1962, செப்டம்பர் 23ல் மகாலட்சுமியாக பிறந்தார். 'பேபி மகாலட்சுமி' என்ற பெயரில் 'நாணல், தட்டுங்கள் திறக்கப்படும்' என தமிழ், மலையாள படங்களில் நடித்தார்.
தமிழில் பாலச்சந்தர் இயக்கிய 'நிழல் நிஜமாகிறது' படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து ‛ஒரு வீடு ஒரு உலகம், ஏணிப்படிகள், அழியாத கோலங்கள், அகல்விளக்கு, முள்ளும் மலரும், மூடுபனி, பசி' என நடித்து பிரபலமானார். பசி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதை கொண்டாட நினைத்த பசி இயக்குனர் துரை 1980, மே 1ல் சென்னையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் விழா நடக்க இருந்த அன்றைய தினம் தான் அவர்(17 வயது) தற்கொலை செய்து கொண்டார். அவரை பாராட்டி அணிய வாங்கப்பட்ட மாலைகள் அவரது உடலுக்கு போர்த்தப்பட்டது.
'பாலைவனச்சோலை' படத்தில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சுஹாசினி பாடும்போது 'எனக்கொரு மணமாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ...' என்று பாடுவார். ஷோபாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று பல தேசிய விருதுகளுடன் 62வது வயதிலும் அம்மாவாகவேனும் நடித்துக் கொண்டிருந்திருப்பார்.