பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
திரைப்படத்தின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும், அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆஸ்கர் விருது போட்டியையும் நடத்துகிறது. வளர்ந்து வரும் இளம் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இதனை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்காக போட்டி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 படங்கள் பங்கேற்றன. இதில் 15 மாணவர்கள் தயாரித்து, இயக்கிய ஆவணப் படம் மற்றும் குறும்படங்கள் சிறந்ததாக தேர்வாகின. இதில் இந்திய மாணவர்கள் 2 பேர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ரிஷப் ராஜ் ஜெயின், 'எ ட்ரீம் கால்ட் குஷிக்' என்ற தலைப்பில் தயாரித்த ஆவணப்படத்திற்கு மாணவர் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள 'ரோஹிங்கியாக' அகதியின் கதையை சொல்லும் ஆவணப்படம் இது. ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அகாடமியை சேர்ந்த பிலிம் டிசைன் மாணவர் அக்ஷித் குமார் தான் இயக்கிய குறும்படம் ஒன்றுக்காக விருது பெற்றார்.