மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஓல்டு டவுன் பிக்சர்ஸ், பத்மஜா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'ஜீப்ரா'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கி இருக்கும் இப்படம், வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
ஓடிடி திரைப்படமான 'பெண் குயின்' மூலம் கவனத்தை ஈர்த்த ஈஸ்வர் கார்த்திக், இயக்கியுள்ளார். சத்யராஜ், சத்யதேவ், தனஞ்சயா, பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் கூறும்போது, “இந்தியாவின் மிகப்பெரிய பைனான்சியல் திரில்லராக, பிரமாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக்குற்றத்தில் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் படம். இதில் வெவ்வேறு மூன்று கதைகள் இருக்கிறது. அதனை இணைக்கும் முக்கிய புள்ளியாக வரும் கேரக்டரில் பிரியா பாவனி சங்கர் நடிக்கிறார்” என்றார்.