2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது பெரிய தயாரிப்பாளர், அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர். இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்களை அழைத்து எம்ஜிஆர் படம் எடுக்கச் சொல்வார். மறுபேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய திருமுகம், நடிகர் சிவாஜி வைத்து இயக்கிய ஒரே படம் என்றால் அது ‛தர்மராஜா' தான்.
1980ல் வெளியான இந்த படத்தில் சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்தனர். கோழையாக இருப்பவன் திடீர் வீரனாகிற கதை தான். சிவாஜி அந்த ஊரில் உள்ள கோவிலை பராமரிப்பவர். பெரிய மனிதர் போர்வையில் அந்த ஊருக்கும் வரும் கே பாலாஜி கோவிலில் உள்ள சாமி சிலையை திருடிவிட்டு சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான சிவாஜி, பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம் சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வெளிநாடு எல்லாம் சென்று படமாக்கினார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிவாஜி, திருமுகம் இணைந்து படம் பண்ணவில்லை.