பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா | நடிகர் மோகன் பாபு தலைமறைவா...? |
சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் சின்னத்திரை, யூ-டியூப் மற்றும் அனைத்தும் சோஷியல் மீடியாக்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், மணிமேகலையின் பதிவுக்கு ஆரம்பத்தில் வாழ்த்துகள் சொல்லி பதிவிட்டிருந்த குரேஷி, பிரியங்காவுக்கு எதிராக விவகாரம் பெரிதானதும் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்மானத்தை பற்றியெல்லாம் மணிமேகலை இவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன அன்று, பிரியங்கா, திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை தான் குறுக்கிட்டு பிரியங்காவை பேசக்கூடாது என்று தடுத்தார்' என கூறியுள்ளார். குரேஷியின் இந்த பதிவானது மீண்டும் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.