அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த தொடரின் பாதியிலேயே விலகிய அவர் உயர் படிப்பை படிக்க சென்று விட்டார். அதன்பிறகு அருவி தொடரில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அருவி தொடர் சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
தற்போது அடுத்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஜோவிதா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும். என்னிடம் வேறு எதையும் எதிர்பார்க்காமல் திறமையை மட்டும் எதிர்பார்த்து வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்' என்று கூறியிருக்கிறார்.