சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லால் நடிப்பில் மூன்றாவது முறையாக லூசிபர்-2 இரண்டாம் பாகமாக உருவாகும் 'எம்பிரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடிப்பதற்கு மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட சில மடங்கு அதிகமாகவே ஊதியம் பெறுகிறார்.
இந்த நிலையில் மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான ஒரு புதிய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார் பிரித்விராஜ் இதற்கான முத்திரை கட்டணமாகவே 1.84 கோடி அவர் செலுத்தியுள்ளார். மும்பையில் அதிக பட வாய்ப்புகள் வருவதாலும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடப்பதாலும் தனக்கு அங்கே ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரித்விராஜ் இந்த வீட்டை வாங்கி இருப்பதாக தெரிகிறது.