ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் |
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜானி மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானியின் மனைவியும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம். இதனால், அவர் மீது வழக்கு பாயலாம் என்கிறார்கள்.
போலீஸ் தற்போது நடத்தி வரும் விசாரணையின் முடிவுக்குப் பிறகுதான் அவர்கள் ஜானி மாஸ்டரைக் கைது செய்வார்களா இல்லையா என்பது தெரிய வரும். ஆளும் அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதால் அரசியல் அழுத்தம் இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.