2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலாக 126 கோடியைக் கடந்ததாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 288 கோடியை கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், அதன்பின் கடந்த ஒரு வாரமாக எந்த வசூல் விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் 25 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்தே 25 கோடிதான் வந்திருக்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் 25 கோடியும் வெளிநாடுகளில் வசூலான தொகை 150 கோடி என்பதும் தகவல்.
இந்த வாரம் பல புதிய படங்களும், அடுத்த வாரம் சில புதிய படங்களும் வெளியாக இருப்பதால் 'தி கோட்', 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்பதுதான் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தற்போதைய அப்டேட்.