நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு விடாமுயற்சி திரைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடித்து முடித்தோம். தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி திரைக்கு வரும்'' என்று கூறினார். அதனால் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தின் போது விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.