ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், 'தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்று அரசு ஒரு கமிட்டி அமைத்து பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது' குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் “ஹேமா கமிட்டி விவகாரம் போல் தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படங்களில் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டதில்லை” என்றார்.