'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள படம் நந்தன். வருகிற 20 ம் தேதி வெளிவருகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குனர் இரா சரவணன் பேசியதாவது :
ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்பெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணை கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும். படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள்.
ஆனால் ட்ரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார்.
இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது.
ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு, கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன்.
மக்களின் கூட்டத்திற்குள் நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.
படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது சார் இந்த படத்தில் நீங்கள் தான் நாயகன் என்று தான் சொன்னேன், முதல் பாடலே அவருக்கு தான் வைத்திருக்கிறேன், எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருங்கள் எனும் ஒரு மிகச் சிறந்த பண்பை, அவரிடம் கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.