ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

மலையாள திரையுலகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள அஜயண்டே ரெண்டாம் மோசனம் படம் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்கீஸின் கொண்டல் ஆகிய படங்களுடன் நடிகர் ரகுமான் நடித்துள்ள பேட் பாய்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பேட் பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷீலு ஆபிரகாம், நடிகர்கள் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, ஆண்டனி வர்கீஸ் மூவரும் சேர்ந்து ஓணம் பண்டிகைக்கு தங்கள் மூவரின் படங்கள் மட்டுமே வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மற்ற சிறிய படங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைக்கும் விதமாக ஒரு அதிகார குழுவாக செயல்பட்டு வருகின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப நாட்களாக மலையாள திரை உலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ஷீலு ஆபிரகாமின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமனம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.