2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'ஸ்வீட் காரம் காபி' தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார் சாந்தி. தேசிய விருது பெற்ற கிரிஷாந்தின் 'தி க்ரோனிகல்ஸ் ஆப் தி 4.5 கேங்'கில் சாந்தி அடுத்து நடிக்கவுள்ளார். தற்போது முரளி கோபியின் திரைக்கதையில், ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மலையாளம்-தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தி திரைக்கதை எழுத்தாளராகி இருக்கிறார். நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான திரைக்கதையை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து அடுத்ததாக படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சாந்தி.