ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர்களில் சிலர் தலா 1 கோடி நிவாரண நிதியை அறிவித்தனர். தமிழ் நடிகர்களில் முதலாவதாக நடிகர் சிம்பு இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து 6 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சிம்புவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்,” என எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
அதற்கு சிம்பு, “நன்றி பவன் கல்யாண் அவர்கள். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன்,” என பதில் நன்றி தெரிவித்துள்ளார்.