அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரணாவத் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் 'எமெர்ஜென்சி'. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி உள்ளது . இந்திரா வேடத்தில் கங்கனா நடித்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்காததால் படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் தற்போது மும்பை தணிக்கை குழுவினர் 'யுஏ' சான்றிதழை வழங்கி உள்ளனர். இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த வசனங்கள், பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அகதிகளைத் தாக்குவது மாதிரியான காட்சிகள், ஆபரேஷன் 'ப்ளூஸ்டார்' பற்றிய உண்மையான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது போன்ற 10 காட்சிகளை மாற்ற வேண்டும். மற்றும் மூன்று காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.