''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
'சார்பட்டா பரம்பரை' படத்தில் ‛டான்ஸிங் ரோஸ்' ஆக நடித்து கவனத்தை ஈர்த்தவர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கொத்தா' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நாகர்ஜூனாவின் 'நா சாமி ரங்கா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கும் மலையாள படம் 'கொண்டல்'. தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியான 'போட்' படம் நடுக்கடலில் படமானது போன்று மலையாளத்தில் உருவாகும் படம் இது. பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஷபீர் கூறும்போது “இந்தப் படம் சவாலாகவும் அதேசமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவுக்காக கரைக்கு திரும்புவோம். உணவு சாப்பிட்டுவிட்டு, அதே இடத்திற்குச் சென்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். இதில் பலருக்கும் கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் படப்பிடிப்பை சரியாக முடித்தோம். என்னுடைய கம்போர்ட் ஸோனில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து சிறப்பான நடிப்பை இயக்குநர் வாங்கியுள்ளார். இந்த படம் தவிர்த்து தமிழில் இரு படங்கள், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இரு படங்களில் நடிக்கிறேன்'' என்றார்.