4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

மறைந்த பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவன். இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற 80,90- களில் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை பாடியவர். குறிப்பாக ரஜினியின் மாப்பிள்ளை, ஊர் காவலன், மிஸ்டர் பாரத், ரங்கா, படிக்காதவன், மனிதன் உள்ளிட்ட பல ரஜினி படங்களுக்கு பாடியுள்ளார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் இவரின் குரலை ரஜினி படத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து 'மனசிலாயோ' எனும் முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று மாலை வெளியிடுகின்றனர். ஏ.ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
சமீபகாலமாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். பம்பா பாக்யா, சாகுல் ஹமீது, பவதாரிணி ஆகியோரை தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.