ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ள கோட் படம் நாளை செப்., 5ல் உலகமெங்கும் வெளியாகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மீடியாக்களில் தோன்றி இப்படம் குறித்த புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு. அப்போது கோட் படம் குறித்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த் கேரக்டர் பற்றியும் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், இந்த கோட் படத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த விஜயகாந்தின் கேரக்டரை பயன்படுத்தி உள்ளோம். கதைப்படி காவல்துறை உயர் அதிகாரியாக வரும் விஜயகாந்த், சிறிது நேரம் வந்தாலும் அவரது கம்பீரக் குரலில் ஒலிக்கும் அந்த வசனங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.