பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

மலையாளத் திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் மணியம்பிள்ளை ராஜு. ஒரு தயாரிப்பாளராகவும் மாறி பல வருடங்களாக திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மோகன்லால், மம்முட்டி படங்களில் தவறாது இடம்பிடிப்பவர். சமீபத்தில் இரவு நேரத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு தெருவில் இருந்து மெயின் ரோடு சிக்னல் வழியாக இவரது கார் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக இரு சக்கர வாகனம் மோதி அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் நடிகர் மணியம் பிள்ளை ராஜு தனது காரை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மணியம் பிள்ளை ராஜு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் மெயின் ரோட்டில் மிகவும் மிதவேகத்தில் தான் எனது காரை திருப்புவது சிசிடிவி காட்சிகளை நன்றாக பார்த்தால் தெரியும். இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த வாலிபர்கள் மீதுதான் தவறு என்றாலும் என் கார் மீது அவர்கள் மோதியதை நான் மறுக்கவில்லை. எனக்கு சிக்கன் குனியா காரணமாக உடல் நலம் சரியில்லாததால் அந்த இடத்தில் என்னால் காரை நிறுத்த முடியாமல் என் வீட்டிற்கு வந்து விட்டேன்.
ஆனாலும் போகும் வழியிலேயே போனிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு என் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்லி ஏற்பாடுகளை செய்து விட்டு தான் சென்றேன். போலீசாரிடம் மறுநாள் காலை விசாரணைக்கு வருவதாக சொன்னபடி தற்போது நேரில் காவல் நிலையம் வந்தேன்” என்று கூறியுள்ளார்.