நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கோட் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசிடம் மனு அளித்து இருந்தது.
இந்நிலையில் படம் வெளியாகும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக காலை காட்சிகள் 10:30 மணிக்கு மேல் தான் துவங்கும். நாளை மட்டும் காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் காலை 9 மணிக்கு துவங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏஜிஎஸ் தரப்பில் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு ஒரு நாளைக்கு அனுமதி வழங்கி உள்ளது.