2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? |

விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை செப்., 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே தமிழகம் தவிர, கேரளா மற்றும் பெங்களூருவில் பெரும் வரவேற்பு இருக்கும்.
கேரளாவில் மட்டும் இப்படம் சுமார் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் 4000-க்கும் கூடுதலான காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அங்கு படத்திற்கு பெரும் வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் மட்டும் நாளை 100க்கும் அதிகமான தியேட்டர்களில் 1200க்கும் அதிகமான காட்சிகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கும் இதற்கு முன்பு இவ்வளவு காட்சிகளில் படம் திரையிடப்பட்டது இல்லையாம். அங்கு தெலுங்கு டப்பிங் படமும் திரையிடப்படுகிறது. இதற்கு முன்பு இந்த வருடம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படம் 1300க்கும் கூடுதலான காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் கூட அவ்வளவு தியேட்டர்களில் 'தி கோட்' படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 30க்கும் அதிகமான தியேட்டர்களை மட்டுமே தங்களது இன்றைய போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.