தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா |
2024ம் வருட தீபாவளியில் சில 'டாப்' நடிகர்களின் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு முன்னதாகவே நாளை மறுதினம் விஜய் நடித்துள்ள 'தி கோட்', அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. ரஜினி படத்துடன் போட்டி போட வேண்டாமென 'கங்குவா' படம் போட்டியிலிருந்து விலகியது. அந்தப் படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்', ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தையும் தீபாவளிக்கு வெளியிடுகிறோம் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதனால், இந்த வருட தீபாவளிக்கு 'டாப்' நடிகர்களின் படங்கள் வராமல் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர்தான் இந்த தீபாவளிக்கு மோத உள்ளனர்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்றாலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுவதாலும், 'அமரன்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.