ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அக்., 10ல் படம் ரிலீஸாக உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத், விசாகபட்டினம் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டனர். தற்போது படத்தின் நாயகனான ரஜினியின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இதில் தேவா என்ற வேடத்தில் ரஜினி நடிக்கிறார். அதில் அவரின் கூலி எண் 1421 என்ற பேட்ஜ் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தில் அவரின் நண்பராக தேவா என்ற தேவராஜ் வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டர் மற்றும் அவரின் கேரக்டரை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.