'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி தற்போது படக்குழு சமந்தபட்டவர்கள் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதில் வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, " இந்த படத்தின் ஓப்பனிங் பாடலாக விசில் போடு பாடல் இடம் பெற்றுள்ளது. ஆனால், நீங்கள், பார்த்தது போல் இப்பாடல் இடம் பெறவில்லை. விசில் போடு மற்றொரு வெர்ஷன் தான் திரையில் வரும்" என தெரிவித்துள்ளார்.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பாடலில் இருக்க போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.