வெற்றி தீபத்துடன் வெளியான ‛விஜய் 69' அறிவிப்பு : 2025 அக்டோபரில் ரிலீஸ் | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் |
நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து ‛பிளாக்' என்ற படத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஒரே இரவில் நடக்கும் கதையாக இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானப்படுத்தி நொடிக்கு நொடிக்கு திரில்லராக உருவாகி உள்ளது.
இயக்குனர் பாலசுப்ரமணி கூறுகையில், ‛‛ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதை தான் பிளாக். நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்'' என்கிறார்.