அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பபடப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் கதாபாத்திரம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட துவங்கி உள்ளனர்.
அதன்படி சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சக்கப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சவுபின் சாஹிர் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறார் என குறிப்பிட்டு தயாள் என்ற வேடத்தில் அவர் நடிப்பதாக தெரிவித்து அவரின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.