ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் |
ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ராம்சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் அவரது 16வது படம் துவங்க இருக்கிறது. இதை இயக்குனர் புச்சி பாபு சனா என்பவர் இயக்குகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய்சேதுபதியை அணுகிய போது அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் கடந்த 2021ல் தான் அறிமுக இயக்குனராக இயக்கிய உப்பென்னா திரைப்படத்தில் கதாநாயகி கிர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய்சேதுபதியை நடிக்க வைத்தவர் தான் இந்த புச்சி பாபு சனா. ஆனால் ராம்சரண் படத்திலும் விஜய்சேதுபதிக்கு ராம்சரணின் தந்தை கதாபாத்திரத்தையே கொடுப்பதாக இருந்தாராம். ஆனால் தொடர்ந்து இதுபோன்று கதாபாத்திரங்களில் நடித்தால் தன்னை மீண்டும் மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரங்களுக்குத்தன் அணுகுவார்கள் என்பதால் அதை மறுத்துவிட்ட விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் சொல்லுங்கள் நிச்சயம் நான் நடிப்பேன் என்றும் அவரிடம் கூறிவிட்டாராம். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் சிவராஜ் குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.