மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாடல் ' கோல்டன் ஸ்பெரோ' வருகின்ற ஆகஸ்ட் 30ந் தேதி அன்று வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன் நடனம் ஆடி உள்ளார். இப்பாடல் பற்றி எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "நீக் பட முதல் பாடலை தனுஷ் உடன் இணைந்து பார்த்தேன். பிரியங்கா மோகன் ஸ்டைல் ஆக நடனம் ஆடியுள்ளார். தனுஷ் இந்த பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியுள்ளார். குறிப்பாக இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார். அற்புதமாக எழுதியுள்ளார்" என பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.