திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் மலையாள சினிமா உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் அங்குள்ள நடிகர் சங்கமும் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றி நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு : சினிமா மட்டுமல்லாது எல்லா துறையிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதேசமயம் அதை உடனே சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் குரல் கொடுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ‛நோ' என்றால் ‛நோ' தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒரு போதும் விட்டுத்தராதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.