2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலரும் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை மினு முனீர் என்பவர் நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார். அதாவது முகேஷ் தனது வீட்டிற்கு அழைத்திருந்தபோது அங்கே சென்ற தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதுதான் மினு முனீரின் குற்றச்சாட்டு. இந்த நிலையில் நடிகர் முகேஷ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 2009ல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர்தான் இந்த மினு முனீர். அப்போது மீனு குரியன் என்கிற பெயரில் தன்னுடைய புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்துடன் எனது வீட்டிற்கு வந்தார். எல்லா நடிகர்களையும் உற்சாகப்படுத்துவது போலவே அவரிடம் பேசி அனுப்பி வைத்தேன். நான் நடந்து கொண்ட விதத்திற்கு அவரே எனக்கு நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்பினார். அந்த சமயத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதன் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 2022-ல் அவரும் அவருடைய கணவரும் பண உதவி கேட்டு என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கேட்ட தொகை மிகப்பெரியது என்பதால் என்னால் தர இயலவில்லை என்று கூறினேன். உடனே சிறிய தொகையாவது கொடுங்கள் என ஒரு லட்சம் கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து பலமுறை வாட்ஸ் அப் மூலமாக பணம் கேட்டு எனக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நான் தரவில்லை என்பதால் அவர் கணவர் மூலமாக நான் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி வெளியில் சொல்வதாக பிளாக்மெயில் செய்ய துவங்கினார். அது பயனளிக்காததால் தற்போது என் மீதான அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மற்றவர்கள் போல நான் வாய் மூடி மவுனமாக ஒதுங்கி செல்ல மாட்டேன். சட்டரீதியாக இதை எதிர்கொண்டு உண்மை என்ன என்பதை வெளியில் கொண்டு வருவேன்” என்று கூறியுள்ளார் முகேஷ்.