'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத்திற்கு முன்பிருந்தேபே நடிப்பில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகிறார்கள் நடிகர் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தே விட்டார் கமல். ஆனால் ரஜினிகாந்த் சூழ்நிலை காரணமாக அரசியலில் இருந்து பின் வாங்கினார். தற்போது விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை தான் பரபரப்பாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இணையாக அவ்வப்போது ரஜினி, கமல் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஒருவர் ஒருவர் மோதிக்கொள்வதையும் அதிகமாக பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு ரஜினி ரசிகர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றை விமர்சித்து கிண்டலாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். கமலின் ரசிகர்கள் சிலர் இதற்கு பதில் விமர்சனம் செய்திருந்தாலும் கமலின் கட்சியில் பொறுப்பு வகிப்பவரும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருபவருமான நடிகை வினோதினி, கமலுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து ரஜினிகாந்த் குறித்து மறைமுகமாக கடுமையான விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‛‛அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை. ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர். ஈஷா யோகம் கண்டதில்லை. உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை. எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம். ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை. ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை
So…
ஓரமாகப் போய் அழவும்,
அது உத்தமம்'' என ரஜினி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் இப்போதும் ரஜினியும் கமலும் மிக நெருங்கிய நட்பை பேணி பாதுகாத்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் தேவையில்லாமல் ஒரு நடிகரை இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தரம் தாழ்த்தி பேசி அவர்களுக்கு தரக்குறைவான விமர்சனங்களை தேடி தருவது அழகல்ல என்று இரண்டு நடிகர்களின் படங்களையும் ரசிக்கும் பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல கமல், ரஜினி ஆகியோர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதை இரு தரப்பு ரசிகர்களும் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அதுதான் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்கிற கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் அதிகமாக பார்க்க முடிகிறது.