''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாள திரையுலகில் பணிபுரியும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் வாய்ப்புகளுக்காக அனுசரித்துச் செல்ல பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான குழு இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலரும், பிரபல இயக்குனர்கள் நட்சத்திரங்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அதே சமயம் பல நடிகர்கள் இந்த ஹேமா கமிஷன் அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் இதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் இப்படி தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவது குறித்து கூறும்போது, “ஏதோ மலையாள திரையுலகில் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஒரு ஹேமா கமிஷன் குழுவினர் இதுபோன்று ஒரு விசாரணையை மலையாள திரையுலகில் மட்டுமே முன்னெடுத்து துவக்கி உள்ளனர். இதை போன்று மற்ற திரையுலகங்களிலும் விசாரணை நடத்தினால்தான் அங்கு இருக்கும் இது போன்ற பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வரும்” என்று கூறியுள்ள அவர், இது போன்ற குற்றங்களை யார் செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சினிமாவில் மட்டுமல்ல பெண்கள் தாங்கள் பணியாற்றும் எந்த ஒரு இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.