ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மயுகம் என்கிற படம் வெளியானது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக மாந்திரீக பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. மேலும் மம்முட்டி இந்த படத்தில் 80 வயதான பழமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரம்மயுகம் படத்தின் டைட்டில், லோகோ, இசை, வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடைவிதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதே சமயம் சோசியல் மீடியாக்களில், வலைதளங்களில் இந்தப் படம் சம்பந்தப்பட்டவற்றை பயன்படுத்தி புதிதாக ஏதேனும் சொந்த படைப்புகளை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடமிருந்து முறையான அனுமதியை பெற்று அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.