ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நேரடி அரசியலில் இறங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என கட்சியின் பெயரை அறிவித்தார். நேற்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் விஜய்யை வாழ்த்தி அவரது தாயாரான ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டி:
என் மகன் விஜய். அவர் தனது மக்களுக்காக தொடங்கியிருக்கும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் விழா என்பது எனது மனதில் புதுவொளி பட்டொளி வீசி படபடவென பறக்கிறது. பரவசம் அடைகிறேன். விஜய் எதையும் அமைதியாக உள்வாங்கி, ஆர்ப்பரிப்பு இல்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்த பிள்ளை. அமைதியில் அவர் ஒரு கடல். 'சான்றோன் என கேட்ட தாய்' என்ற வள்ளுவன் வாக்கை ஏற்கனவே விஜய் எனக்கு பெற்று தந்திருக்கிறார்.
பெயரிலே வெற்றிக்கொண்ட நீ கட்சியிலும் வெற்றியை பெயராக வைத்துள்ளாய். திரையில் உன் முகம் பார்த்து உயர்த்திய மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும் செய். எல்லாமும் செய். பசித்தோர் முகம் பார். மக்களை தேடி சென்று நேரில் சந்தி. அவர்களின் குறைகளை காது கொடுத்து கேள். அவர்களில் ஒருவனாக மாறு.
தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. கண்ணியம் காப்பாற்று, ஈட்டிய செல்வம் தந்த மக்களுக்கு புரட்சிகர திட்டங்கள் தீட்டு. உன் அரசியல் பயணம், பணம் தாண்டிய லட்சிய பயணம் என்பதை ஊரே பாராட்டும்போது உள்ளம் நெகிழ்கிறேன். கயிற்றில் ஏறி, கம்பத்தில் உயர்ந்து, காற்றில் விரிந்து மலர்கள் பொழிந்து வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி.
உன் நண்பா, நண்பிகளின் நம்பிக்கை நீ, உன் கழகத்தின் முதல் தொண்டன் நீ. இப்போது போல் எப்போதும் உண்மையாக இரு. வாகை சூடு விஜய். உன்னை வாழ்த்தி தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிக்க காத்திருக்கும் தாய்மார்களின் ஒருத்தி. ஏற்கனவே நான் ஒரு சி.எம். (செலிபிரட்டி மதர்), இனி நானும் ஒரு பி.எம்.(புரவுடஸ்ட் மதர்). இவ்வாறு அவர் கூறியுள்ளார்.