''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
முன்னணி மலையாள நடிகரான சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.ஆனார். இது பாரதிய ஜனதா கட்சி கேரளாவிற்குள் பலம் பெறுவதற்கு வழியாக அமைந்தது. இதற்கான பரிசாக பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக்கியது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி “அமைச்சர் பதவியை விட எனக்கு சினிமாதான் பெரிது. சினிமாவுக்காக அமைச்சர் பதவியை இழகத் தயார்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது “எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாதான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்.
சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி 'ஒற்றக்கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”என்று பேசி உள்ளார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.