அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இடையில் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் முழு மூச்சாக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' திரைப்படம் பிரசாந்தை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பியது. இதனால் பிரசாந்த் மீண்டும் உற்சாகமாக உள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து ' தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் பேசியதாவது, " இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் மட்டும் நடிக்காமல் அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் "என பேசியுள்ளார்.