புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
தமிழ் சினிமாவின் முதல் ஸ்டைலிஷ் ஹீரோ ஜெய்சங்கர். பின்னாளில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்டாக மாறினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் அதே ஜெய்சங்கரை கண்கள் சிறிதாக இருப்பதாக கூறி புறக்கணிக்கப்பட்ட கதையும் உண்டு.
ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் 1962ம் ஆண்டு வெளியான படம் 'அன்னை'. எஸ்.வி.ரங்காராவ், சவுக்கார் ஜானகி, பானுமதி, சந்திரபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தில், பானுமதியின் மகன் கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் ஜெய்சங்கர். ஆனால் ஜெய்சங்கரை நேரில் பார்த்த ஏவிஎம் செட்டியார் “இந்த பையனின் கண்கள் சின்னதாக இருக்கிறது. சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டான்” என்று நிராகரித்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் ராஜா என்ற தெலுங்கு நடிகர் நடித்தார்.
அதன்பிறகு 1965ம் ஆண்டு 'இரவும் பகலும்' படத்தில் ஜெய்சங்கர் அறிமுகமானார். சின்ன கண்களை உடையவர் என்று புறக்கணிக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு அந்த கண்களால்தான் இரவும் பகலும் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. “அபூர்வமாகவே இது மாதிரி கண்கள் அமையும் அது உங்களுக்கு இருக்கிறது” என்று கூறி அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஜோசப். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதே ஆண்டு 5 படங்களில் நாயகனாக நடித்தார். தனது 3வது படத்திலேயே (பஞ்சவர்ணக்கிளி) இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
முதல் படத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கர், பின்னாளில் ஏ.வி.எம் தயாரித்த பல படங்களில் நாயகனாக நடித்தார்.