தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! |

தமிழ் சினிமாவில் உள்ள சில மாறுபட்ட இயக்குனர்களில் ஒருவர் எனப் பெயரெடுத்தவர் மிஷ்கின். அவரது இயக்கத்தில் வந்த படங்கள் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட ரசனையைத் தரும் படமாக இருக்கும். அப்படிப்பட்டவர் சமீப காலங்களில் மேடைகளில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசி யு டியூப் சேனல்களுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் 'கன்டென்ட்' கொடுப்பவராக மாறியுள்ளார்.
கடந்த வாரம் 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய போது அப்படத்தை ஓட வைப்பதற்காக நிர்வாணமாகக் கூட ஆடுவேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோ கடந்த வாரத்தில் மிகப் பெரும் 'கன்டென்ட்' ஆக அமைந்தது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த 'வாழை' திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய போது மீண்டும் 'கன்டென்ட்' கொடுத்துள்ளார். அவரது பேச்சு அனைத்துமே கன்டென்ட் ஆகவே இருந்தது. நேற்று இரவு அவர் பேசிய பேச்சுக்கள் இன்று காலையில் தனித் தனியாக, துண்டு துண்டாக பல்வேறு வீடியோக்களாக மாறி சுற்றி வர ஆரம்பித்துவிட்டது.
மற்றவரைப் பாராட்டுவதில் தவறில்லை, அதே சமயம் அவரது பேச்சுக்களால் அவரது இமேஜும் குறைவதை அவர் கவனிக்க வேண்டும் என சில நலம் விரும்பிகள் தெரிவிக்கிறார்கள். அது மிஷ்கின் காதில் சென்று சேருமா ?...




