100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் நடிகை ஸ்ரீ லீலா. மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங் மற்றும் ரவி தேஜாவின் 75வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்க ஸ்ரீ லீலாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மல்லிடி வசிஷ்டா என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஏற்கனவே நடிகை திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக தான் ஸ்ரீ லீலாவை அணுகினார்கள் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை தருவதற்கும் தயாராக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் இந்த சூழலில் இப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தனது திரையுலக பயணத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதியதால் இந்த வாய்ப்பை ஏற்க ஸ்ரீ லீலா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.




