டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பழம் பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அதில், பல ஹிட் பாடல்களும் அடங்கும். சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுக்கு இவரின் குரலில் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த அளவிற்கு தனது மெல்லிய குரல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி.சுசீலா.
கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிகாணிக்கை செலுத்தியபோது, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிய வீடியோ வைரலானது. சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி
பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து
உள்ளனர்.




