பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார் அஜித். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜித் மட்டுமின்றி திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோரின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எடிட் செய்யப்பட்ட விடாமுயற்சி படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த அஜித் குமார், காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறீர்கள். ஹாலிவுட் படக் காட்சிகள் அளவுக்கு பிரமிப்பாக உள்ளது என்று மகிழ்திருமேனியை பாராட்டி இருக்கிறார். விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும் படம் தள்ளிப்போகும் என்கிறார்கள். அதன்படி கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் படக் குழு இன்னும் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தவில்லை.