நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் தீவிர அரசியலில் நுழைய இருப்பதால் விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படத்திற்கு முந்தைய படம்மாக இது உருவாகியுள்ளது. அதனால் இதை பார்த்து பார்த்து கவனமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
13 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். அப்போது மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்புகளில் இருந்த விஜய் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் வெங்கட்பிரபு.
அந்த சமயத்திலேயே வெங்கட் பிரபுவிடம் அஜித் நீங்கள் விரைவிலேயே விஜய் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று கூறினாராம். ஆனால் அந்த வாய்ப்பு கையில் வந்து சேர்வதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியுள்ள வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து அஜித் கூறிய விஷயம் ஒன்றையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த கோட் திரைப்படம் மங்காத்தாவை விட 100 மடங்கு அதிகம் இருக்கும் விதமாக உருவாக்குங்கள் என்றும் விஜய் தீவிர அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவரை திரையுலகில் இருந்து கம்பீர வெற்றியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அஜித் தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.