சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்த வேடத்தில் நடித்திருக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் உருவாகி உள்ள இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழில் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா என்ற படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று திரைக்கு வந்துள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் அவ்வப்போது கதைகளை எழுதி வருகிறேன். டைரக்ஷன் துறையில் அனைத்து நுட்பங்களையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்தில் படங்கள் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அவருக்கான கதையை தயார் செய்து வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.