7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

நடிகர் தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்து விட்டாலும் அவரது ஐம்பதாவது படமாக உருவான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து வெளியிட்டார். படமும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் அந்த வகையில் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன். இவர் வேறு யாரும் அல்ல தனுஷின் சகோதரி கார்த்திகா தேவியின் கணவர். பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான இவரை ஒரு நடிகராக மாற்றிய தனது சகோதரர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கார்த்திகா தேவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னிடமிருந்த இந்த புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஒரு வருடமாக நான் காத்திருந்தேன். ஒரு இதய சிகிச்சை மருத்துவராக டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயாவின் திறமைகள் நன்கு தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என தனுஷ் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் தனது ஐம்பதாவது படத்தில் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி நடிக்க அழைத்தபோதும் எனக்கு வியப்பாக இருந்தது.
தனுஷ் மற்ற நடிகர்களை படப்பிடிப்பு தளத்தில் வேலை வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் எனது கணவரையும் ஒரு நடிகராக மாற்றியதை பார்த்து பிரமித்து விட்டேன். படத்தில் எனது கணவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். தனுஷ் இயக்கிய அதுவும் அவரது ஐம்பதாவது படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்காக தனுஷிற்கு நன்றி சொல்வதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு சகோதரியாகவும் மனைவியாகவும் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.